Jul 30, 2010


என் அம்மாவின்
முந்தானை...

இந்த
உலகம்
எனக்கு
அறிமுகம்
ஆவதற்கு
முன்பே..
எனக்கு
அறிமுகம்
ஆனது
என்
அம்மாவின்
முந்தானை..

என்
முதல்
உறக்கம்
அதில்தான்..

என்
முதல்
கனவும்
அதில்தான்..

என்
முதல்
நடை
அதைப்பிடிதுதான்...
நடக்க
பழகினேன்...

என்
முதல்
பள்ளி
பயணம்
அதனுடன்
தான்
ஆரம்பம்...

என்
எச்சில்
வியர்வை
என
எத்தனை
அதில்
துடைத்தாலும்...
ஏனோ
அதன்
வாசம்
மட்டும்
மாறவேயில்லை...

என்
வெட்கம்
கனவு
ஆசை
போன்ற
என்
உணர்களை
அங்குதான்
மறைத்துவைத்தேன்...

Jul 23, 2010

கடல்
கடந்து
வந்த
உன்
வாழ்த்துக்காய்
மிகவும்
நன்றி...

Jul 20, 2010

உன்
உதடுகளிடம்
சொல்லிவை
என்
அகிம்சை
போராட்டத்தை
நிறுத்த
வேண்டியிருக்குமென்று...
உன்மேல்
பட்டு
திரும்பும்
காற்றில்
கூட
பிரிவின்
வலியை
உணர்கிறேன்....

Jul 18, 2010

நாகரிகத்தின்
கட்டயதல்
நீயும்
மாறியிருப்பாய்
ஆனால்...
உன்
இரட்டை
ஜடை...
சிவப்புகலர்
ரிப்பன்...
பச்சைகலர்
தாவணி...
இப்படி
மறக்காத
எத்தனையோ..
உன்
நினைவுகள்....

Jul 10, 2010

தொலைந்து
போன
என்
எல்லா
பொருளும்
திரும்ப கிடைத்தது...
உன்னை
தவிர.....

Jul 4, 2010

ஆறு மணிக்கு
அடிக்கவேண்டிய
என் கடிகாரம்..
எண்ணை
போலவே
சோம்பேறியை..
ஏழு மணிக்கு
அலற....
என் காலை
வேலைகளை
அசூரவேகத்தில்
முடித்துக்கொண்டு...
பஸ் ஸ்டாப்பிற்கு
போன பின்புதான்
புரிந்தது...
எல்லோருடைய
கடிகாரமும்
ஏழு மணிக்குத்தான்
அலறியிர்க்கும் போல....
சர்கஸில் வேலை
செய்வது போலவே
என் பஸ் பயணம்..
எப்பொழுதும்
போலவே
லேட்டாய்
ஆபிஸ்கள்
நுழைய...
இந்த
பரபரப்பில்
மறந்து போன
ஜாவா கோடிங்காக
மண்டையை..
சொரிந்தும்
பலன்யிள்ளததால்
கூகிள் தெய்வத்தின்...
உதவியை நாடி
கப்பி, பேஸ்ட்
செய்து...
மீட்டிங்கில்
மேனேஜர்
நுனி நாக்கு
ஆங்கிலத்தில்
பேச...
நான்
யா யா என்று
தலையாட்டி
வைத்து...
மாலையில்
நண்பன்
அழைத்த
பார்ட்டியை
முடித்துவிட்டு...
நள்ளிரவிற்கு
பின் உறக்கம்...
இப்படியே
மூன்று வருடம்
கழிய...
என் வாழ்கையின்
வேக
சக்கரத்தில்
மாட்டி
எங்கோ
தொலைந்து
போனீர்கள்..
நீயும்...
உன் காதலும்...